யாழில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலை முயற்சி

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் இவ் வருடம் க.பொ.த உயர்தரம் எடுக்கும் மாணவியே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவருகின்றது.

ஆவா குழு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஒருவனை குறித்த மாணவி காதலித்து வந்ததாகவும் அவனது தொலைபேசியில் மாணவியின் ஏராளமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும் தெரியவருகின்றது.

நேற்று குறித்த மாணவியின் தொலைபேசிக்கு சிங்களத்தில் வந்த அழைப்பையடுத்தே மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளாள்.

குறித்த மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு துாக்கில் தொங்கிய போது கழுத்தில் கட்டிய துணி அறுந்து வீழ்ந்ததால் உயிர் தப்பியுள்ளாள். மகள் அறைக்குள் சென்று கதவை முடியதால் சந்தேகமடைந்த தாயார் கதைவை தட்டியும் திறக்காத காரணத்தால் அயலவர்களுடன் சேர்ந்து கதவு உடைக்கப்பட்டு மாணவி காப்பாற்றப்பட்டுள்ளாள்.

மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் எழுதி வைத்திருந்த இடத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் இது தொடர்பாக அயலவர்கள் சிலருடன் மாணவியின் தந்தை முரண்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.