ஆவா குழுவின் உபதலைவன் உட்பட 4 பேர் கொழும்பில் கைது! குடாநாட்டில் சுற்றிவளைப்பு!

ஆவா குழுவின் உபதலைவன் உட்பட 4 பேரை கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் இன்றும் துன்னாலை, அல்வாய், சுன்னாகம், ஏழாலைப் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரின் சுத்திவளைப்பில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதே வேளை யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது  வாள்வெட்டு  தாக்குதல் மேற்கொண்ட  சம்பவத்தோடு தொடர்புடைய  பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேரி இன்று (07.08)  பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய  நான்கு சந்தேக நபர்களை  கடந்த நாட்களில் பொலிஸார் கைது செய்திருந்த வேளையிலேயே  பயங்கரவாத தடுப்புப்பிரிவினர்  பிரதான சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் இன்று வரை ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழுபேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகளையும் தேடல் நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.