07. 08. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

மிதுனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

கடகம்

மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

சிம்மம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தொட்டது துலங்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

கன்னி

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

துலாம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

விருச்சிகம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆடை, ஆபரணம் சேரும். வராது என்றிருந்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கும்பம்

பல வேலைகள் தடைப்பட்டு முடியும். உறவினர், நண்பர்களால் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். செலவினங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

மீனம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்