05. 08. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ரிஷபம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

மிதுனம்

மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

கடகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

சிம்மம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி சில பொறுப்பை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கன்னி

சகோதரங்களால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

துலாம்

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்-. பிரபலங்களின் நட்பு கிட்டும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

விருச்சிகம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

தனுசு

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

மகரம்

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்

பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

மீனம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்