02. 08. 2017 இன்றைய இராசிப் பலன்கள்

மேஷம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கடகம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

  கன்னி

துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

மகரம்

குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

கும்பம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் நன்மை உண்டு. நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

மீனம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே