01. 08. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

காலை 8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

மிதுனம்

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புது சொத்து வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

கடகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

கன்னி

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்

காலை 8.53 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்

காலை 8.53 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

தனுசு

எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

மகரம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

கும்பம்

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மீனம்

காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் அவசரப் பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்