கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிகளைப் பெற்று கொள்ளல்.

அத்துடன், வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மீள்குடியேற்றமும் கண்ணிவெடி அகற்றல், அனர்த்த முகாமைத்துவம் சுகாதாரம் கல்வி உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், இந்த கூட்டத்தில் இணைத்தலைவர்களான மாவை சேனாதிராஜா, இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.