'விவேகம்' தெலுங்கு ரிலீஸ் உரிமைக்கு ரூ.4.5 கோடி!

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஆகஸ்ட் 10 என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே சாட்டிலைட் உரிமை, இந்தி ரிலீஸ் உரிமை ஆகிய வியாபாரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்று தெலுங்கு மாநிலங்களின் ரிலீஸ் உரிமை வியாபாரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

விவேகம்' படத்தின் தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமையை ரு.4.5 கோடிக்கு நவீன் என்பவர் பெற்றிருப்பதாகவும், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமைக்கு பயங்கர போட்டி இருப்பதாகவும், தயாரிப்பு நிறுவனமே ஒருசில பகுதியில் நேரடியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.