விக்ரம் பாராட்டு: ஐஷ்வர்யா ரஜேஷ் துள்ளல்!!

கெளதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

விக்ரம் நாயகனாக நடித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ரீத்து வர்மா, ராதிகா சரத்குமார், பார்த்திபன், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

படத்தில் நடித்தது குறித்த அனுபவத்தை பற்றி ஐஷ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது கதாபாத்திரத்தை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. கெளதம் மேனன் படத்தில் நடிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்.

முதல் நாளிலேயே கடினமான காட்சியை கெளதம் சார் கொடுத்துவிட்டார். அதில் நடித்து முடித்தவுடன், பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் சூப்பர் என விக்ரம் வெகுவாக பாராட்டினார். அதனை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.