கள்ளக்காதல்: இராணுவ வீரரின் மனைவியான சிங்கள பெண்ணுக்காக யாழ் வந்த கனடா தமிழரின் கதி

சிங்களக் குடும்பப் பெண் ஒருவருடன் முகப்புத்தகத்தில் காதல் கொண்டு அவளைச் சந்திப்பதற்காக இலங்கை வந்து தற்போது கடுமையாக தாக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கொழும்பு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கணவன் மட்டக்களப்பு பகுதியில் இராணுவ இரண்டாம்தர நிலை அதிகாரியாக கடமையாற்றுவதாகவும் தெரியவருகின்றது. இப் பெண்ணுடன் முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்ட கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாண குடும்பஸ்தர் ஒருவர் கனடாவில் இருந்து கொழும்பு சென்றுள்ளார்.

அங்கு குறித்த பெண்ணை அழைத்துச் சென்று கம்பகா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் குறித்த விடுதியை நடாத்தி வந்தவர் சந்தேகமடைந்து அப்பெண்ணையும் கனடா நபரையும் பிடித்து அச்சுறுத்தி விசாரித்த போது இவர்களின் கள்ளக்காதல் வெளிவந்துள்ளது.

இதன் பின்னர் கனடாவில் இருந்து வந்த நபர் கடுமையாகத் தாக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

குறித்த கனடா நபர் தற்போது அப்பகுதி பொலிஸ் நிலையத்தில் தன்னைத் தாக்கி கப்பம் பெற முயன்றதாகவும் தன்னிடம் இருந்த சில பெறுமதி வாய்ந்த பொருட்களை விடுதி நடாத்தியவர்கள் கொள்ளையடித்துள்ளதாகவும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பொலிசாரின் விசாரணையின் போது கனடா நபருடன் தங்கியிருந்தவர் இராணுவவீரர் ஒருவரின் மனைவி என்பதும் அதனாலேயே தாங்கள் தாக்கியதாகவும் விடுதி நடத்துபவர்கள் தெரிவித்துள்ளார்கள்.