வெளிநாட்டு மாப்பிளைகளின் திருக்கூத்துகள்! காலில் விழுந்து கதறக் கதற இழுத்துச் சென்ற லண்டன் பொலிஸ்!

தமிழர் பிரதேசங்களிலிருந்து யுத்தம் முடிவடைந்த பின்னரும் புலம்பபெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்கள் யுவதிகளின் எண்ணிக்கை  அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்கா, கனமா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் செல்வதற்கு எப்பாடுபட்டாவது முயற்சிக்கின்றனர் தமிழர்களின் இளம் சந்ததியினர்.

இவர்கள் அந் நாடுகளுக்கு செல்வது உயர்ந்த சம்பளங்களுடனான வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளவும் சொகுசு வாழ்க்கையை வாழவுமே என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். வெளிநாட்டு மாப்பிளைகள் என்றவுடன் அந்த மாப்பிளையின் எந்தவித குண நலனையோ அல்லது அவனின் தகுதி எப்படியானது என்பதையோ பாராது அந்த மாப்பிளைகளுக்கு தங்களது மகள்களையும் உறவுகளான பெண்களையும் கட்டிக் கொடுக்க முற்படுகின்றார்கள் தமிழர் பிரதேசங்களில் உள்ள பெண்களின் உறவுகள். இவ்வாறான நிலையில் குறித்த மாப்பிளைகள் வெளிநாடுகளில் என்ன செய்கின்றார்கள் என்பது பல தடவைகள் பலராலும் சுட்டிக் காட்டிப்பட்டிருந்தாலும் கடந்த ஓரிரு நாட்களு்ககு முன்னர் லண்டனின் வெள்ளைக்காரன் ஒருவனின் காலில் விழுந்து கும்பிடக் கும்பிட பொலிசார் ஒரு தமிழ் இளைஞனை இழுத்துச் செல்லும் வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

குறித்த தமிழ் இளைஞன் அந்த வெள்ளைக்காரனின் 12 வயது மகளை படுக்கைக்கு அழைத்திருந்தான். அதுவும் ஒரு றுாம் ஒன்றை ஒழுங்கு செய்து அந்தச் சிறுமியை தன்னுடைய பாலியல் தேவைக்காக பயன்படுத்த முற்பட்டிருந்தான். இந் நிலையிலேயே குறித்த தமிழ் இளைஞன் வெள்ளைக்காரத் தந்தையால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். இந்தக் காட்சிகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. தமிழ் இளைஞர்கள், யுவதிகளின் தவறான நடவக்கைகளால் வெளிநாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. ஆனால் அவை வெளிவராமல் அல்லது தமிழர்கள் பெருமளவு பார்க்கும் ஊடகங்களில் காட்டப்படாமல் தவறவிடப்பட்டன.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் பலரு்ககு தமிழர் பிரதேசங்களில் இருந்து பெண்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வேடிக்கையான ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஆகவே இவர்கள் தொடர்பாக கவனம் எடுப்பது பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் கடமையாகும்.