விஷாலுடன் நடிப்பதா? சரத்குமார் சுவாரஸ்ய பதில்!!

நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிட்டவர்கள் விஷால் மற்றும் சரத்குமார். இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் நடப்பது சகஜமான ஒன்றுதான்.

இந்நிலையில் திரைப்படங்களில் விஷாலுடன் இணைந்து நடிப்பீர்களா என்று சரத்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சுவாரஸ்யமான பதில் ஒன்றை அளித்துள்ளார் சரத்குமார். அவர் கூறியதாவது, தனிப்பட்ட முறையில் விஷாலுக்கு எதிராக எதுவும் இல்லை.

ஆனால் கரும்புள்ளி ஒன்று உருவாகிவிட்டது. நான் ஏதோ பெரிய எதிரி போலவும், பெரிய தப்பு செய்பவன் போலவும் உருவாக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்.

மேலும், அவருடன் இணைந்து நடிப்பேனா என்று எனக்குத் தெரியாது. உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாளை நடிக்க வாய்ப்பு வந்தால், ஏன் செய்யக் கூடாது என்றெல்லாம் கேட்க மாட்டேன். ஏன் செய்ய வேண்டும் என்றுதான் கேட்பேன் என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.