வைரலாகும் விஐபி 2 மேக்கிங் வீடியோ!!

செளந்தர்யா ரஜினிகாந்த இயக்கத்தில் விஐபி 2 அதன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளிவரவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஐபி முதல் பாகம் தனுஷின் 25வது படமாக வெளியானது. அதன் தொடர்ச்சி தான் விஐபி 2. இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் மற்றும் பாலிவுட நடிகை கஜோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுசின் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்ந்து தேனாண்டாள் நிறுவனமும் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...