கமலுக்கு ஒரு பிரச்சனை என்றால் திரையுலகமே ஒன்று கூடுவோம்: விஷால்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நாள் நாள் ஆக பயங்கர எதிர்ப்பை சந்தித்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு, கமல் வீடு முன் போராட்டம் என் எதிர்ப்புகள் வலுத்து வருவதால் இந்த நிகழ்ச்சி 100 நாள் வரை செல்லுமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஒரு பிரச்சனை என்றால் திரையுலகமே அவருக்கு ஆதரவாக ஒன்று சேரும் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார்.

கமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றால் தீர ஆராய்ந்துதான் முடிவு செய்வார். தவறான நிகழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக அவர் கலந்து கொள்ளமாட்டார். அவருக்கு எங்களுடைய முழு ஆதரவும் உண்டு. மேலும் திரையுலகினர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் கமல்ஹாசனை ஒருமையில் பேசுவதை அமைச்சர் தவிர்த்திருக்கலாம் என்றும் விஷால் கூறியுள்ளார்.