யாழில் இளைஞனை தெருவில் போட்டு மிதித்த பொலிசார்!! பதற்றமாக சூழல் ஏற்பட்டுள்து!!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் தமிழ் இளைஞரொருவர் பொலிசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதால் அப்பகுதியில் தற்போது பதற்றம் நிலவி வருகின்றது.

இன்று (14. 07. 2017) மதியம் 02:00 மணியளவில் காங்கேசன்துறை வீதியால் சுன்னாகம் பக்கமிருந்து யாழ்ப்பாணம் நோக்கி உந்துருளியில் பயணம் செய்த இளைஞனை துரத்தி வந்த இரண்டு பொலிசார் மருதனார்மடம் பகுதியில் வைத்து கடுமையாக தாக்கினர். தமது சப்பாத்து கால்களால் அவ்விளைஞனை பொலிசார் தாக்குவதைக் கண்ட மக்கள் அவர்களை சுற்றி வளைத்ததுடன் பொலிசாரை கடுமையாக எச்சரித்ததுடன் அவ்விடத்தை விட்டு நகர விடாமல் வைத்திருந்தனர். பின்னர் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி இரண்டு பொலிசாரையும் அழைத்துச் சென்றார்.

கடந்த வாரமும் சுன்னாகம் பொலிசாரால் வேறிருவர் இவ்வாறு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.