சாவகச்சேரியில் கள்ள மாட்டிறைச்சி கொண்டு சென்ற முஸ்லீகளை பொலிசார் விடுவித்தது ஏன்?

சாவகச்சேரி தனக்கிளப்புப் பகுதியில் களவாக பிடிக்கப்பட்ட 5 மாடுகளை இறைச்சியாக்கி வாகனம் ஒன்றில் கொண்டு சென்ற 4 முஸ்லீம்களை இன்று சாவகச்சேரிப் பொலிசார் கைது செய்திருந்தர்கள்.  ஆனால் குறித்த பொலிசாருக்கு வந்த உயரதிகாரி ஒருவரின் தொலைபேசி அழைப்பை அடுத்து குறித்த நான்கு முஸ்லீம்களையும்  சாவகச்சேரிப் பொலிசார் விடுவித்துள்ளதாக தெரியவருகின்றது.

சாவகச்சேரிப் பொலிசாருடன் தொடர்பு கொண்டு கள்ள மாடுகளை வெட்டியவர்களை விடுவித்த பொலிஸ் உயரதிகாரி இவ்வாறான சமூகவிரோதிகளுடன் தொடர்பு கொண்டு லஞ்சம் வாங்கி வருகின்றாரா? என பொதுமக்கள் தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான பொலிஸ் உயரதிகாரிகளால் நேர்மையுடன் நடக்கும் பொலிசாருக்கும் கெட்ட பெயர் உருவாகுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.