வடக்கு மாகாணசபை போல கேட்பார் யாருமில்லாது நடுத்தெருவில் சாப்பிட்ட ஆச்சி!

யாழ் கொக்குவில் சந்திப் பகுதிக்கு அருகில் நடு வீதியில் வைத்து தனது உணவை சாப்பிட்டுள்ளார் மன நலம் குன்றிய வயோதிப மூதாட்டி. இவர் நடுத்தெருவில் வைத்து சாப்பிடுவதை அப்பகுதியில் உள்ள கடைகளில்  இருந்தவர்களும் வீதியால் சென்றவர்களும் வேடிக்கை பார்த்தார்களே தவிர அந்த மூதாட்டியை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல முயலவில்லை.

இதனை அவதானித்த சமூக ஆவர்வலர் ஒருவர் "வடக்கு மாகாணசபைக்குள் விசர் கூடியதுகள் இருந்து கும்மாளம் இட்டும் சாப்பிட்டு வருவதை அடுத்தநாள் பேப்பரில் பார்த்து மகிழ்வது போல் இந்த மூதாட்டியின் செயலையும் இவ்வாறு பார்த்துக் கொண்டு நிற்கின்றார்களே" என கவலையுடன் தெரிவித்துவிட்டு மூதாட்டியை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றார். 

வேடிக்கை பார்க்கின்றார்கள்

வேடிக்கை பார்க்கின்றார்கள்