கடலுக்கு கீழ் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்

தரையில் பண்டைய கோயில்கள், சரணாலயங்கள் இருப்பதென்பது புதிதான ஒரு விடயம் அல்ல.

ஆனால் ஆழ் கடலில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான இடிபாடுகள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

எனினும் அதன் மர்மங்களை விஞ்ஞானிகள் இன்று வரையில் கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தோனேஷியா கடலுக்கு கீழ் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழையான பௌத்த மத ஸ்தலங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தோனேஷியாவின் பால என்ற கடலுக்கு கீழ் விகாரை போன்ற இடம் அமைந்துள்ளது.

அந்த விகாரையில் தனிப்பட்ட கட்டமைப்புடன், பெரிய மற்றும் சிறிய சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அங்கு தருக்க நிலைகள் மற்றும் மர்மமான சிற்பங்கள் அதிநவீன முறையில் கடலுக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது.