மூதூரில் 10 கோடி ரூபா செலவில் புதிய ஆடைத் தொழிற்சாலை- சம்பந்தன் அடிக்கல் நாட்டினார்!

திருகோணமலை, மூதூர் கிழக்கு சீதனவெளிக் கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.

இத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 11.00க்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன், அர்.எம்.அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

3.5 ஏக்கர் காணிப்பரப்பில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இருக்கின்ற குறித்த ஆடைத்தொழிற்சாலையின் மூலம் 350 இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.