ரன்னே கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி; ஒரு நாள் போட்டி வரலாற்றில் சாதனை படைத்த தென் ஆப்ரிக்க வீராங்கனை!!

இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்குபெற்றுள்ளது.

ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் மோத வேண்டும் என்பது பெண்கள் ஐசிசி டிராபியின் விதிமுறை.

இந்நிலையில் நேற்று தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டனே வன் நைக்கர்க் ரன் எதுவும் கொடுக்காமல் 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இவரின் இந்த சாதனை இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் படைக்கப்படாத புது சாதனையாகும்.

இந்த போட்டியின் போது டனே வன் நைக்கர்க் மொத்தம் 3.4 ஓவர்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.