கர்ப்பிணி பெண்களே உஷார்! கொழுப்பினால் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு?

அதிக கொழுப்புடைய உணவு பொருட்களை உண்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இது தொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அவர்களின் உடல் எடையை அதிகரிக்க கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவை எடுத்துக்கொண்டாலும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியம், தாயின் உடல் வலிமைக்காக பல்வேறு உணவு வகைகளை எடுத்துக் கொள்வார்கள்.

இதுபோன்ற உணவுகள் பெரும்பாலானவை அதிகம் கொழுப்பு நிறைந்ததாக உள்ளது. கொழுப்புச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் கொழுப்பு சக்தி அதிகரித்து அது தாய்மார்களையும் கார்ப்பிணி பெண்களையும் எளிதாகத் தாக்கி அவர்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாக காரணமாகிறது.

குறிப்பாக எண்ணெய், நெய் உள்ளிட்ட கொழுப்பு வகை உணவு பொருட்களை சாப்பிடுவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நோய் மரபணு ரீதியில் த‌லைமுறை தலைமுறையாகவும் பரவும் என்ற அதிர்ச்சி தகவலையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.