30 நாட்களுக்குள் 5470 இலட்சம் ஏப்பம் விட்ட சத்தியலிங்கம் - செயலாளருக்கு மாரடைப்பு

30 நாட்களுக்குள் 5470 இலட்சம் ஏப்பம் விட்ட சத்தியலிங்கம் - செயலாளருக்கு மாரடைப்பு.

மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட மன அழுத்தமே இந்த மாரடைப்பிற்கு முக்கிய காரணமென மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு மாகாண சபையின் நிதி கையாளுதல் தொடர்பாக சுகாதாரதுறை அமைச்சர் சத்தியலிங்கத்தினால் முறையற்ற விதத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டமையால் கடும்விசனத்திற்குள்ளாகியிருந்த நிலையில் அமைச்சின் செயலாளர் திருவாகரனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபையின் சுகாதார அமைச்சிற்காக ஒதுக்கப்பட்ட 640 மில்லியன் ரூபாவில் 90 வீதமான பணம் 2015 ஆண்டு டிசம்பர் மாதம் வரை பிரஜோசனப்படுத்தப்படாது இருந்துள்ளது.

இதனால் மாகாண சபையில் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய சங்கட நிலையினால் பெரும் நெருக்கடிக்குள்ளாகிய சத்தியலிங்கம் ,அருணாச்சலம் படத்தில் நடந்தது போல 30 நாட்களுக்குள் 5470 இலட்சம் ரூபாய்களை செலவழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன் அனுபவம் இல்லாத சத்தியலிங்கத்தினால் எதுவும் செய்யமுடியாத நிலையில், தனது செயலாளரை குறித்த பணங்களிற்கான காசோலைகளில் கையொப்பமிட்டு தன்னிடம் தருமாறு கட்டளையிட்டுள்ளார்.

இதற்கு செயலாளர் திருவாகரன் மறுப்பு தெரிவித்ததும் பிரச்சினை கிளம்பியுள்ளது.

மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை இவ்வாறு அநியாய முறையில் செலவிடமுயாதென மறுப்பு தெரிவித்த திருவாகரன் ,முதலமைச்சரிடம் சென்று முறையிட்டபோது முதலமைச்சரும் அவ்வாறு கையொப்பமிடுங்கள், வருகின்ற பிரச்சினைகளை தான் பார்த்துக்கொள்கின்றேன் என பதிலளித்துள்ளார்.

திட்டங்களிற்கு , மக்களிற்கு செலவளிக்கப்படாமல் பல ஆயிரம் இலட்சங்கள் மாயமாக மறைந்துள்ளது.

மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகை பணம் வீணாக ஒரு மனிதனுக்கு செல்கின்ற பெரும் மன உளைச்சலுக்குள்ளான திருவாகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அடித்த பணங்கள் எங்கே?? முன்னாள் ஆட்சியாளர்களுக்கு இன்று நடக்கும் நிகழ்வுகள் இன்னும் சில காலங்களில் சத்தியலிங்கத்திற்கும் ஏற்படும் என்பது நிச்சயம்.