ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக துண்டுபிரசுரம் ஒட்டியவர்களின் வழக்குகள் தள்ளுபடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் யாழ்ப்பாண மக்களுக்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்தும் முகமாக நாட்டில் யாழ் குடாநாடு எங்கும் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவாக தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அப்போது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் இருந்து வந்தது.

இரகசியமாக செயற்பட்ட சிலர் தலைமையில் மிகவும் திட்டமிட்டு யாழ் குடாநாடு எங்கும் சுவரொட்டிகள் ஒட்டபட்டது. பொலிசாருக்கு யாழ் குடா நாடு எங்கும் கண்ணில் மண்தூவியபடி மிகவும் திட்டமிட்ட கட்டமைப்பாக பல குழுவாக இந்த செயலை செய்து வந்தனர்.

அதே குழுவினர் கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்திலும் நோர்வேயில் இருந்து வந்தவர் தலைமையில் மிகவும் இரகசியமாக தந்திரமான முறையில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டி யாழ் குடாநாட்டை அலங்கரித்திருந்தனர். இவ்வாறு செயற்பட்ட பலர் தீவகத்திலும் யாழிலும் வல்வெட்டித்துறையிலும் தென்மராட்சியிலும் மகிந்த ராஜபக்சவின் ஆதரவான பொலிசாரின் சுற்றிவளைபுகளில் கைதாகினர்.

கைதாகிய பலரும் நீதிமன்ற வழக்குகளை கடந்த பலமாதங்களாக எதிர் நோக்கி இருந்தனர். ஜனாதிபதியின் விசேட உத்தரவுக்கமைய அனைவரினதும் வழக்குகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தீவகத்தில் கைது செய்யபட்டவர்கள் அனைவரும் தீவகத்தில் நீதிமன்றத்திலும் வடமராட்சியில் கைது செய்யபட்ட அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்திலும் யாழில் கைதாகிய பலர் மல்லாகம் நீதிமன்றிலும் விடுதலை செய்யபட்டுள்ளனர்.