எண்ணெய் வழிவதை தடுத்து நிறுத்தும் மசாஜ் ?

2012-02-03 22:38:02 ஒரு சிலரின் முகத்தில் எப்பொழுது பார்த்தாலும் எண்ணெய் வடிந்து கொண்டிருக்கும்.. இதனால் முகமே டல்லாகி சோகத்துடனே காட்சியளிப்பர்.

என்னதான் செய்தாலும் முகத்தில் எண்ணெய் படிவதை கட்டுப்படுத்த முடியாது. இதற்கு காரணம் வாலிபத்தில் சுரக்கும் ஹார்மோன்களே. இதனால் முகத்தில் பருக்கள் தோன்றி அவை மறைவதற்கும் அதிக நாட்களை எடுத்துக்கொள்ளும். இதனால் இளைய தலைமுறையினர் அதிக மன உளைச்சலுக்கும் ஆளாவர். இயற்கையான முறையில் இதை சரி செய்வது குறித்து தெரிவித்துள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

வெதுவெதுப்பான நீர்


எண்ணெய் பசை சருமத்தை அடிக்கடி வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும் இதனால் சருமத்தின் துவாரங்களில் உள்ள அடைப்பு நீங்கும். எண்ணெய் கரையும். எண்ணெய் வழிகிறதே என்று கடின சோப்புகளை உபயோகிக்கக் கூடாது. ஆன்டி பாக்டீரியல் சோப்புகளை உபயோகிக்கலாம். யுடிகோலன் கலந்த நீரில் குளித்தால் துவாரங்களில் அடைப்பு ஏற்படாது. எண்ணெய் வழியாது.


சோற்றுக் கற்றாழை ஜெல்


சருமத்தில் சோற்றுக்கற்றாலை ஜெல் தடவினால் முகம் குளிர்ச்சியடையும். எலுமிச்சை சாறும், சம அளவு தண்ணீரும் கலந்து முகத்தில் தடவி பின்னர் வெந்நீரில் கழுவலாம்.


குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி, வெள்ளரிச்சாறு அரை தேக்கரண்டி, கலந்து பின்னர் வெது வெதுப்பான நீரில் குளிக்கலாம். முகம் கழுவும் போது நுனி விரலால் கீழிருந்து மேலாக மசாஜ் செய்யலாம். எண்ணெய் இல்லா மாய்ச்ரைசர்களை உபயோகிக்கலாம். இது முகத்தை இளமையாக்கும்.


இனிப்பும் சாக்லேட்டும் எதிரி


எண்ணெய் சருமம் கொண்டவர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும். உணவுப் பொருட்களில், உப்பு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும். இனிப்பு உணவுப் பொருட்கள், சாக்லேட், குளிர்பானங்களை தொடவே கூடாது என்பது அழகியல் நிபுணர்களின் அறிவுரை.


பச்சை காய்கறிகள்


பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். வைட்டமின் பி2 நிறைந்த கொட்டைகள், பீன்ஸ், காராமணி போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்வது எண்ணெய் வழிவதை தடுக்கும்.


பேஸ் பேக்


முல்தானி மெட்டி எனப்படும் மண் பூச்சு கொண்டு முகத்திற்கு பேக் போடுவது எண்ணெய் சருமத்தை நீக்கும். அதை விடுத்து கண்ட கண்ட ரசாயனங்கள் நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்வது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.


முக்கியமாக நல்ல உறக்கமும், மன அமைதியும் அவசியம் மேலும் முகத்திற்கு மசாஜ் செய்வதும் எண்ணெய் வழிவதை தடுத்து நிறுத்தும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

News most views
Sports news most views
Events most views
Schools most views
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz