காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற மாத்தறை இளைஞன் மாயம்

காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை பகுதியில் இருந்து காங்கேசன்துறை, தல்செவன கடற்பகுதிக்கு சென்றிருந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *