வவுனியாவில் 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம்

வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் 25 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது மூன்று சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.

தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பியமை, முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம், தலைக் கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு எதிராக தண்டம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *