வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி!

மக்கள் விடு­தலை முன்­னணி தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் புத்­தி­ஜீ­விகள் அமைப்­பினர் வடக்­கிற்­கான விஜ­ய­மொன்றை மேற்கொள்ளவுள்­ளனர்.

தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க அறி­விக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் கொள்கைத் திட்­டங்கள் உள்­ளிட்ட பல்­வே­று­பட்ட விட­யங்­களை வடக்கு மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­களை செய்­வ­தற்கும், வடக்கு மக்­களின் கோரிக்­கைகள் தொடர்­பான மேல­திக ஆராய்­வு­களைச் செய்­வ­தற்­கா­க­வுமே மேற்­படி புத்­தி­ஜீ­விகள் அமைப்­பினர் அங்கு செல்­ல­வுள்­ளனர்.

வடக்­கிற்கு செல்லும் புத்­தி­ஜீ­விகள் குழுவில் சட்­டத்­த­ர­ணிகள் உபுல் குமா­ரப்­பெ­ரும, அஜித் கல்­லோன, அசோக பீரிஸ் உள்­ளிட்­ட­வர்கள் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, மக்கள் விடு­தலை முன்­னணின் மத்­திய குழு உறுப்­பி­னரும் வட­மா­காண விவ­கா­ரங்­களை கையாண்டு வரு­ப­வ­ரு­மான இரா­ம­லிங்கம் சந்­தி­ர­சே­கரன், மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் வடக்கு தமிழ் மக்­க­ளுக்கும் இடை­யி­லான புரி­தல்கள் சம­கா­லத்தில் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­ட­தோடு தமிழ் மக்கள் பிர­தான கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு எந்­த­வி­த­மான நியா­யமும் இல்லை என்றும் கூறினார்.

அத்­துடன் எதிர்­வரும் தேர்­தல்­களில் வடக்கு மக்கள், மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை தாம் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *