முல்லைத்தீவு, வள்ளுவர்புர பாடசாலை தொடர்பில் பெற்றோரின் வேண்டுகோள்
முல்லைத்தீவு, வள்ளுவர்புரம் பாரதி மகா வித்தியாலயம் அதிபர், உப அதிபர் இல்லாத நிலையில் நீண்டகாலமாக தொடர்ந்தும் காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாடசாலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும்,
950 மாணவர்கள் கல்வி கற்றுவரும் குறித்த பாடசாலையில் 48 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தின் கீழ் உள்ள இந்த பாடசாலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அதிபர் இல்லாத நிலையில் பாடசாலை நிர்வாகம் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது.
இவ்வாறான நிலை தொடராமல் இருக்க அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.