இலங்கையில் இனங்காணப்பட்ட முதலாவது தொற்றாளர்!
இங்கிலாந்தில் முதன்முறையாக இனங்காணப்பட்ட கொவிட் 19 வைரஸின் புதிய வடிவம் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வந்த நபரொருவரிடம் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆதன்படி, குறித்த வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்ட 51 ஆவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
இந்த வைரஸ் B117 என அழைக்கப்படுகிறது.
இலங்கையில் இனங்காணப்பட்ட குறித்த கொவிட் 19 தொற்றாளர் தற்போது இலங்கைக்கு சுற்றுலா விஜயத்தினை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் சகல துறை வீரர் மொயின் அலிக்கு கொவிட் தொற்று கடந்த 4 ஆம் திகதி உறுதிப்படுத்துப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.