மண்டைதீவு வயல் கேணிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

மண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்ட கேணிக்குள் விழுந்து சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மண்டைதீவு 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசகுமார் சர்வின் (வயது-06) மற்றும் இராசகுமார் மிர்வின் (வயது-05) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.

அண்மையில் பெய்த மழை நீர் வயல் கேணிக்குள் நிரம்பியிருந்த நிலையிலேயே அதில் விழுந்து குறித்த சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

முன்னைய இணைப்பு:

மண்டைதீவுப் பகுதியில் வயல் கேணி ஒன்றுக்குள் விழுந்த இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த கேணிக்குள் அண்மையில் பெய்த மழை நீர் நிரம்பியிருந்த நிலையில் அதில் விழுந்து குறித்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மற்றும் 5 வயதுடைய சகோதரர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *