உலக சாதனை படைத்த மாஸ்டர் டீசர்.. இனி யாருமே கிட்ட வர முடியாது போல!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர்.

ஏற்கனவே பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் படத்தின் டிரெய்லரை வெளியிடாமல் தாமதப்படுத்தி வந்தது படக்குழு.

அதற்கு காரணம் மாஸ்டர் படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய முடியாமல் போனதே. இருந்தாலும் விஜய் இல்லாத தீபாவளியா? என்பதைப்போல மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானது.

இதுவரை வந்த விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்டு இருந்த மாஸ்டர் டீசர் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

அதன் விளைவாக வெறும் 24 மணி நேரத்தில் 20 மில்லியன்(2 கோடி) பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அது மட்டுமில்லாமல் வேறு ஒரு முக்கியமான உலக சாதனை படைத்துள்ளது மாஸ்டர் டீசர்.

மிகக் குறுகிய காலத்தில் 2 மில்லியன் லைக் பெற்ற ஒரே டீசர் என்ற சாதனை படைத்துள்ளது. உலக சினிமாவிலேயே இதுதான் முதல் முறையாம். இதனை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.

டீசரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாஸ்டருக்கு போட்டியாக அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் வலிமை படத்தின் டீசர் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *