யாழ் புன்னாலைக்கட்டுவனில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் உயிரிழந்த இளைஞர் வயாவிளான் மத்திய கல்லூரியின் 2018 ஆம் ஆண்டு உயர்தர தொழிநுட்ப பிரிவு மாணவராவார்.
இந்த நிலையில் குறித்த இளைஞனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.