கொரோனாவிலிருந்து விடுபடுவதற்காக கிளிநொச்சியில் விசேட யாகம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்கு கிளிநொச்சியில் விசேட யாகமொன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட கோரி இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரியிருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த விசேட யாகம் இன்று கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காலை 10 மணியளவில் கிளிநொச்சி பசுமை பூங்கா அருகில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் குறித்த விசேட யாகம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த யாக பூசையில் கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *