யாழ்.பருத்தித்துறை கொரோனா தொற்றாளர் சென்ற இடங்கள்; வெளியானது பயண விபரம்

யாழ்.மாவட்டத்தில் பருத்தித்துறை கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 24ம் திகதிவரை சமூக மட்டத்தில் நடமாடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில், அவர் பொது போக்குவரத்தில் பயணித்த வழித்தடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பருத்தித்துறை – மயிலிட்டி – கீரிமலை வழித்தட பயணிகள் கவனத்திற்கு, குறித்த தொற்றாளர் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர் சென்ற இடங்கள்

21/10/2020- பருத்தித்துறை – ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத்தொகுதி) சேட் தைப்பதற்கு மற்றும் பருத்தித்துறை பஸ் நிலைய பகுதி

22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்

23/10/2020 பலாலி வடக்கு அன்ரனிபுரம் ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்

1- 22/10/2020 – பருத்தித்துறை – கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு பொலிகண்டியில் இருந்து – பலாலிக்கு

2- 24/10/2020-கீரிமலை – பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து பொலிகண்டி பகுதிக்கு

பகல் – 6.30 க்குகுறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக தங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *