இரண்டாம் குத்தில் நடித்த பிரபலமே படத்தை காரி துப்புகிறார்..

தமிழ் சினிமாவின் டைரக்ட் அடல்ட் படமான ‘இருட்டு அறையில் முரட்டுகுத்து’ வின் அடுத்த பாகம் தான் ‘இரண்டாம் குத்து’. இந்தப் படத்தினை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் டீசர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது நாமறிந்ததே.

இந்நிலையில் பலதரப்பட்டவர்களின் எதிர்ப்பை சந்தித்த இப்படம் தற்போது அந்தப் படத்தில் நடித்த நடிகரின் எதிர்ப்பதமான விமர்சனத்தை பெற்றுள்ளது. இது அந்த படத்தின் இயக்குனரை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது இந்தப் படத்தில் நடித்தவர்தான் நடிகர் சாம்ஸ். மேலும் இவர் சில நாட்களுக்கு முன்பாக இந்தப் படத்துக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது ரசிகர்கள் கண்டபடி அவரை திட்டியதால் தனது முடிவை திடீர் என மாற்றியுள்ளார் சாம்ஸ்.

இதுபற்றி சாம்ஸ் அளித்துள்ள பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

“சினிமா துறையில் யாரும் எடுத்து விடாத படத்தையா நான் இப்போ எடுத்துட்டேன்?” ஏன் இவ்வளவு எதிர்ப்பு? என்று கூறி சந்தோஷ் பி ஜெயக்குமார் தன்னை நியாயப்படுத்திய போது, “அவன் செஞ்சா நீ செய்வியா?” என மக்கள் சமூக அக்கறையுடன் பதிவிட்டு இருப்பது, இயக்குனரை போன்றே நானும் தவறு செய்து உள்ளேன் என்பதை அறிந்து கொண்டேன்.

“ஏன் இப்படி ஒரு படத்தை உருவாக்கி உள்ளீர்கள்?” என்று கேட்க கூடிய தகுதி எனக்கு இல்லை. ஏனென்றால் இவ்வளவு நாட்கள் பெரியவர்கள் முதல் குழந்தைகளுக்கு பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்த நான் இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கக்கூடாது என்பது இப்பதான் எனக்கு புரியுது.

மேலும் நான், இளைஞர்களை ஜாலியா குஷிப்படுத்துவதற்கு இந்த படத்திற்கு ஓகே சொன்னேன். இப்ப தான் இதன் பின்விளைவு எவ்வளவு மோசமானது என்று தெரிகிறது .

எனவே, முதலில் என்னை மாற்றிக்கொண்டு, அதன்பின் மக்களுக்கும் பிடித்தமான தனி ஒழுக்கத்தை பின்பற்றும் வகையில் படங்களை நடிக்க முடிவெடுத்துள்ளேன்” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *