செயலாளரைக் காப்பாற்ற பிரதேசவாதத்தை கையிலெடுத்த சம்பந்தனுக்கு கடும் எதிர்ப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்று வவுனியா ஆரம்பமான போது தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கை பரவலாக விவாதிக்கப்பட்டது.

இதன் போது குறிக்கிட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு பிரதேச வாதத்தை தூண்ட முயன்றதாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் இணைந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். தேசியப் பட்டியல் விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட முறைமை தவறு எனத் தெரிவித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, செயலர் கிழக்கைச் சேர்ந்தவர்.

இந்தத் தீர்மானத்தை வடக்கிலுள்ளவர்கள் கொண்டு வருகிறீர்கள். இது பிரதேசவாதத்தை தூண்டலாம்.

அதனால் இதை இப்போதைக்கு நிறைவேற்றாமல் தவிருங்கள். வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எம்மை அடிமைப்படுத்த நினைக்காதீர்களென்று சம்பந்தன் குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து கூட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தனுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

‘கூட்டமைப்பின் தலைவர்தான் நீங்கள். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் அல்ல. உங்களால்தான் கூட்டமைப்பு தோற்றது. நீங்கள் வெளியேறுங்கள். பிரதேசவாதத்தை தூண்டாதீர்கள்’ என்று பெரும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் சபையினர் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரதேச வாதத்தைத் காட்டி பிழை செய்த செயலாளரைக் காப்பாற்ற வேண்டாம் என கடும் தெணியில் தெரிவிக்க சம்பந்தன் அமைதியானார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *