யாழ்ப்பாணம் மீசாலையில் பகுதியில் வாள் வெட்டு! ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் நேற்று (11) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார் சசிவர்மன் (28-வயது) என்பவரே காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *