யாழ் சுண்ணாகத்தில் இரு இளைஞர்கள் கைது

யாழ் சுண்ணாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைதாகியுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர் சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடமிருந்து 85 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளதாக தெரிவித்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இன்று அதிகாலை மானிப்பாய், உடுவில் பகுதியில் இராணுவம், மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *