புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகர் முழுவதும் பொலிஸார் விசேட பாதுகாப்பு

தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகையினை முன்னிட்டு வவுனியா நகரில் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமையுடன் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

பண்டிகை காலமாக கருதப்படும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் அதிகளவு இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வீதி விபத்துக்கள், திருட்டு சம்பவங்கள், கொரோனா தொற்று முகக்கவசம் அணியாமை, வீதி நடைமுறைகளை பின்பற்றாமை போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு அவர்களின் வழிகாட்டலில் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையுடன் துவிச்சக்கரவண்டியிலும் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *