யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் போதைப் பொருள் வியாபாரம்! பெண் உட்பட இருவர் கைது!

யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரும் பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு இன்று நண்பகல் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இருவேறு இடங்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா

பொம்மைவெளியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர், ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

ஹெரோயின்

அத்துடன், பொம்மைவெளி 8ஆம் குறுக்குத் தெரிவைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், 5 கிராம் 750 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் கூறினர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *