விழிப்புணர்வு: ஆசையால் தன் பணத்தை இழந்த யுவதி!! வங்கி மனேஜர் சொல்வது என்ன?

ஒரு பெண் வங்கிக்கு வந்திருந்தார் மிகக் கவலை தோய்ந்த முகத்துடன். என்னை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காத்திருந்தார்.

நானும் அவரை அழைத்து என்ன விடயம் என்று வினவினேன். 95000 பணம் CDM/ATM இல் வைப்பு செய்த slip ஒன்றை காட்டினார்.

தனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தாதகவும் அதில் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து parcel ஒன்று வந்துள்ளாதகவும் 95000 பணத்தை சுங்கத்துக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சொல்லியுள்ளனர்.

தொடரந்து அவர்கள் , உரையாடல் மூலமே லண்டனில் உள்ள உறவினர் பெயரை இவர் ஊடாகவே பெற்று , அவர்கள் தான் parcel அனுப்பியதாக கூறி பணத்தை பெற்றுள்ளார்கள்.

  1. இன்னொருவர் கணக்கில் வைப்பிலிட்ட பின் வங்கியால் பணத்தை மீளப் பெறமுடியாது. அது நீதிமன்ற உத்தரவு படி தான் முடியும்.
  2. பணத்தை வைப்பிலிட முன்னர் வங்கி உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாட வேண்டும். ஏனேனில் இவ்வாறன கணக்கிலங்கள் எங்கள் கடுமையான அவதானிப்பில் இருக்கும். உடனடியாக தடுக்க முடியும்.
  3. எக்காரணம் கொண்டும் CRM /ATM Machine இல் இவ்வாறன தெரியாத நபர் அழைத்த பொழுது வைப்பிலிட வேண்டாம். ஏனேனில் வங்கி அலுவலர்களுக்கு குறித்த கணக்கு இலக்கம் தொடர்பான அறிவித்தல் இருக்ககூடும். வங்கி counter இல் வைப்பிலிடுவது பாதுகாப்பானது.
  4. பொருள் அனுப்பினவர்களின் பெயர் விபரங்களை நீங்களாக சொல்ல வேண்டாம். அவர்களிடமே கேட்டு தெரிந்து நீங்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். கப்பலில் வரும்பொழுது தண்ணி பட்டு விபரம் அழிந்ததிட்டுது என்று அவர்கள் ஏமாற்ற கூடும். நம்ப வேண்டாம். நேரில் வருகிறேன் என்று சொல்லமுடியும்.
  5. உங்கள் நிறுவனம் எங்கு உள்ளது நானே நேரில் வருகின்றேன் என்று சொல்லி பார்க்கவும் அல்லது நேரில் செல்லவும்.
  6. உங்களுக்கு யார் parcel அனுப்புவார்கள் என்று தெரிந்து இருக்க வேண்டும் அத்துடன் அவர்களுடன் உரையாடி உறுதிப்படுத்த வேண்டும்.
  7. அல்லது வேண்டாத ஒரு call என்று cut பண்ணிட்டு இருப்பதே வெற்றி தான்.
    நிறுவனத்தின் விபரத்தை சொல்லவும் நேரில் வருகிறேன் என்று மட்டும் கூறுங்கள். உங்களுக்கு பிறகு call வராது.

Vampan.net


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *