இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் உண்டு! – சுமந்திரனுக்கு சிவாஜிலிங்கம் பதிலடி

சுமந்திரன் அவர்களே நீங்கள் இனப்படுகொலை என்பதை ஈழத்தமிழர்கள் கொண்டு செல்ல முடியுமென உயர்ஸ்தானிகர் கூறியமையை ஏற்றுக்கொள்வீரா என நான் எழுப்பிய கேள்விக்கு ஆம், ஏற்றுக்கொள்கின்றேன் என அன்று எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்திருந்தார்.

தற்போது ஆதாரம் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனப்படுகொலைக்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு வவுனியாவில் கூட்டமைப்பின் 2 வருட கால அவகாசம் தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே சுமந்திரன் இவ்வாறு பதிலளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லையென மட்டக்களப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலட்ச கணக்கான மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஆதாரங்கள் தேவையில்லை. இருப்பினும், இனப்படுகொலைக்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிக்கு சட்டம் பற்றி நான் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற ஒரு விடயம்.

வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்லாது மாகாண சபையில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனப்படுகொலை என்பது இன்று நேற்றல்ல ஆயிரத்து 977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கு பல்வேறுபட்ட ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

தந்தை செல்வா- பண்டா ஒப்பந்தத்தில் கூட எதிர்காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் நடத்தப்படாமல் இருக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆயிரத்து 965ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற ஒப்பந்தத்தில் கூட இனப்படுகொலை நடந்தது தொடர்பான விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் வாழ்வியல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என கூறுவது ஐனாதிபதி சட்டத்தரணியாக இருக்கும் அவருக்கு விளங்கவில்லையா?? நான் அவருக்கு இனப்படுகொலை விடயம் தொடர்பில் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை 1983 ல் இனத்தினை அழிக்கும் எண்ணத்தோடு இனத்தை அழிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எனவே இனப்படுகொலை என்பது ஒரு இனத்தை தெரிவு செய்து படுகொலை செய்ய நினைப்பது என்பதை நிரூபிக்க முடியும் உலகில் எத்தனையோ நாடுகளில் இனப்படுகொலை நடைபெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tamilwin
JVPNews


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *