யாழில் நண்பர்களுடன் கடலில் பயணித்த இளைஞனிற்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24) என்ற இளைஞர் நண்பர்களுடன் படகில் பயணித்துள்ளார்.

இடைநடுவில் படகிலிருந்து அவர் தவறிவீழ்ந்தபோது படகின் இயந்திரத்தின் சுழலி வெட்டியதில் அவர்படுகாயம் அடைந்து கடலில் மூழ்கியிருக்கின்றார்.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சுடியோடிகளின் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின்னர் அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவருடைய உடலம் நோயாளர் காவு வண்டிமூலம் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *