வெளியானது பிக்பாஸ் லாஸ்லியா நடித்த ப்ரண்ட்ஷிப் பட டீஸர்; குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டமே உண்டு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியபோது அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்வார். இதனால், அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம்.

இதனையடுத்து, அவர் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் பிரண்ட்ஷிப் படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஹர்பஜன் சிங் ஆடிப்பாடி சண்டையிட்டு டீசரில் கவனம் ஈர்க்கிறார். தற்போது ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துமழை பொழிந்து வருகிறார்கள்…

குறிப்பிட்ட டீஸர் வீடியோ காணொளியை காண இங்கே க்ளிக் செய்யுவும்…..


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *