TIK TOKஇல் விடுதலைப் புலிகள் தொடர்பான காணொளி வெளியிட்ட இளைஞர் கைது!
TIK TOK சமூக வலைதளம் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான காணொளியை பகிர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
25 வயதான இளைஞரை பயங்கரவாத புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் சமூக வலைத்தளத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்தல் மற்றும் அதன் தலைவர் வே.பிரபாகரன் தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், பின்னரான காலத்தில் ஹட்டன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.