பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்குபற்றிய இளைஞன் யாழில் கைது!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டார்.

இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுடிருந்தார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்று(18) மதியம் கைது செய்தனர்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைது செய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றபின்னர் சுமார் ஆறு மணித்தியாலயங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்பாகக் காத்திருந்தனர். இளைஞனின் தாயார், மகனின் விடுதலையைக் கோரி பொலிஸ் நிலையம் முன்பாக கதறி அழுது கொண்டிருந்தார்.

பருத்தித்துறையில் பேரணி இடம்பெற்ற வேளை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *