மனைவியின் சித்தப்பாவிற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரும் ரோஹித்த ராஜபக்ச

தனது மனைவியின் சித்தப்பாவிற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச கோரியுள்ளார்.

என்.வீ திவாகரன் என்ற நபர் தனது மனைவியின் சிறிய தந்தை எனவும், அவருக்கு எதிராக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனைவியான டட்யானாவின் தாயை திவாகரன் திருமணம் செய்து கொண்டுள்ள போதிலும், டட்யானாவின் தந்தை அவரல்ல என ரோஹித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக திவாகரனுடன் பெரிய தொடர்புகள் கிடையாது எனவும் சில ஆண்டுகளாகவே அவருடன் எந்த தொடர்பும் பேணப்படவில்லை எனவும் அ வர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திவாகரன் பெண்களை இரகசியமாக காணொளி எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,

பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் அவர்களின் சமூக அந்தஸ்து கருத்திற் கொள்ளப்பட வேண்டியதில்லை எனவும் ரோஹித்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *