விஜய்யின் ”வாத்தி கம்மிங்” சும்மாவா?? சாதனை படைத்த வீடியோ பாடல்!!

கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸாகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி பெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தின் வசூல் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரூ.200 கோடி கிளப்பில் விஜய்யின் மாஸ்டர் இணைந்துள்ளது.

இந்நிலையில், மற்ற ஹீரோக்களும் விஜய்யைப் பின்பற்றி தங்களின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் ரிலீஸானாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்து இன்னொரு பிரமாண்ட படம் உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதற்குத்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

மேலும் , இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்காக மாஸ்டர் படம் ஒடிடியில் ரிலீஸாகவுள்ளதாக விஜய் கூறியிருக்கி்றார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் வீடியோவை தற்போதுவரை , சுமார் 7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

நாளை மாஸ்டர் படம் அமேசான் ஒடிடியில் வெளியாகவுள்ள நிலையில் வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி வைரலாகிவருகிறது. விஜய்யின் நடனம் பலரையும் கவர்ந்துள்ளது.
இப்பாடலை 24 மணிநேரத்தில் 5.8 லட்சத்திற்கு அதிகமானவர்களும், தற்போதுவரை 7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *