புரெவி சூறாவளி இலங்கையை தாக்கும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது (Low Pressure Area) தற்போது தாழமுமாக (Depression) வலுவடைந்து, திருகோணமலையில் இருந்து தென்கிழக்காக 750 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுகிறது.
இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் வலுவான தாழமுமாக (Deep Depression) உருமாறி, அதனை அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது பின்னர் எதிர்வரும் புதன்கிழமை 02ம் திகதி மட்டக்களப்பிற்கும், முல்லைத்தீவுக்கும் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.