போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவருக்கு நேர்ந்த கதி; யாழில் சம்பவம்

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ்.வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி வெளியன்தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மகேஸன் தவம் என்ற 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வீட்டுக்கு சென்றிருந்த குறித்த நபர் நாக பாம்பு ஒன்றை பிடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அதன் பின்னர் பாம்பை விட்டுவிட்டு துாங்க சென்றவர் திடீரென நெஞ்சு வலியால் துடித்ததுடன் தண்ணீர் கேட்டுள்ளார்.

இதனையடுத்து சுமார் 3 செம்பு தண்ணீரை குடித்தபோதும் நெஞ்சுவலி ஓயாத நிலையில் பருத்துறை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அவருடைய கையில் பாம்பு தீண்டியதற்கான அடையாளம் காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *